வட மாகாணத்தில் 892 பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் தரம்5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய போதிலும் 538 பாடசாலைகளில் இருந்து ஒரு மாணவரேனும் சித்தியடையவில்லை. எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2016ம் ஆண்டில் இடம்பெற்று அண்மையில் பெறுபேறு வெளிவந்த தரம் 5 புலமைப் பரீட்சையில் வட மாகாணமே தமிழ் மொழி மூலமான பரீட்சையில் முதலிடம் பெற்றிருந்த்து. இருப்பினும் வடக்கில் உள்ள 983 பாடசாலைகளில் ஆரம்ப நிலைகளை உடைய 892 பாடசாலைகளின் 19 ஆயிரத்து 090 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர். இவ்வாறு பரீட்சை எழுதிய மாணவர்களில் இருந்து 2 ஆயிரத்து 21 மாணவர்கள் மட்டும் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர்.
குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கில் பரீட்சைக்குத் தோற்றிய 17 ஆயிரத்து 69 மாணவர்கள் வெட்டுப் புள்ளியிணை அண்மிக்க முடியாது போய்விட்டது.
வடக்கில் 892 பாடசாலை மாணவர்களில் 354 பாடசாலைகளின் மாணவர்கள் மட்டுமே வெட்டுப் புள்ளியை தாண்டிய வகையில் 538 பாடசாலை மாணவர்களில் ஒருவரேனும் வெட்டுப் புள்ளியை தாண்டாதமை கல்வித் திணைக்களங்களின் தகவல்கள் உறுதி செய்கின்றன.
அவற்றின் அடிப்படையில் பரீட்சை இடம்பெற்ற பாடசாலைகளில் 40 வீதமான பாடசாலைகளில் இருந்தே மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டிய நிலையில் 60 வீதமான பாடசாலைகளிலர இருந்து ஒருவர் ஏனும் வெட்டுப் புள்ளியை தாண்டவில்லை. இவ்வாறு வெட்டுப்புள்ளியை தாண்டிய பெறுபேறுகளைப் பெற்ற 354 பாடசாலைகளிலும் 50ற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தலா ஒருவர் மட்டுமே வெட்டுப் புள்ளிகளைத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.