உலகின் மிகப் பெரிய விமானம் நேற்று முதல் இலங்கையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், மிகப் பெரிய விமான நேற்று தரையிறங்கியது.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய விமானம் நேற்று மாலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அந்த விமானத்தை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மிகப் பெரிய விமானத்தின் பிரதான விமானியாக, இலங்கையை சேர்ந்த ஒருவரே செயற்பட்டுள்ளார்.
உதய திலக்கரத்ன என்ற இலங்கையரும், அவருக்கு உதவி விமானயாக அல் மிஹாரி என்ற விமானியும் செயற்பட்டுள்ளனர்.
பிரதான விமானி உதய திலக்கரத்ன, முன்னாள் நாடாளுன்ற உறுப்பினராக எட்வின் திலக்கரத்னவின் மகன் ஆவார்.
திலக்கரத்ன இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடமையாற்றியுள்ளார். பின்னர் அவர் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில் தற்போது அவர் அங்கு செயற்பட்டு வருகின்றார்.
உலகின் மிகப்பெரிய விமானமான யு-380 விமானத்தில் ஒரே நேரத்தில் 540 பயணிகள் பயணிக்க முடியும்.
தற்போது எமிரேட்ஸ் நிறுவனத்திடம் இவ்வாறான 96 விமானங்கள் உள்ளதாகவும், மேலும் 48 விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.