ஐந்தாவது ஆண்டில் காலடி பதிக்கும் Valvainews.org

0
1,040 views

ஐந்தாவது ஆண்டில் காலடி பதிக்கும் Valvainews.org உனக்கு என் வாழ்த்துக்கள் பல கோடி…

வல்வை மண்ணில் மட்டுமின்றி புலம் பெயர் வல்வையர்கள் வசிக்கும் தேசமெங்கும் அவர் தம் மனங்களில் தன் பெயரினை ஆணித்தரமாய் பதித்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எம் Valvainews.org. நாம் பிறந்த நோக்கத்தை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வதன் வாயிலாகவும், நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதன் வாயிலாகவும் தான் பிறந்த நாள் தருணம் என்பது அர்த்தம் பெறுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன் என்னென்ன கனவுகளுடனும், இலட்சியங்களுடனும் உன் நாமம் சூட்டப்பட்டுள்ளதோ அதே வீச்சில்,ஒவ்வொரு வருடமும் உன்னைப் பலப்படுத்தி வல்வை மண்ணில் தவழ்கின்ற பல இணையத்தளங்களில் உனக்கென ஓர் இடத்தினை பிடித்து தனித்துவத்துடன் திகழ்கின்றாய். குறிப்பாக வல்வை முத்துமாரியம்மன், வல்வை கப்பலுடையவர் தேவஸ்தானம், வல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணியர் ஆலயம், தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலயம் போன்றவற்றில் வருடாந்த மஹோற்சவ காலங்களில் அவற்றின் புகைப்படங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து தொலை தூரத்தில் இருக்கும் பக்தர்களை வல்வை மண்ணுக்கே கட்டி இழுத்து வந்து ஆலய வாசலில் விடுவது போன்ற ஓர் உணர்வினை மனதில் பதித்துள்ளது.
திருவிழா காலங்களில் எப்போது போட்டோ வரும் என்று பார்த்து கொண்டு இருப்பது ஓர் வழக்கம் ஆகிவிட்டது.

அதற்கு உன் சேவைக்கு நன்றிகள் பல கோடி. அனைது செய்திகளையும் இலவசமாக பதிவேற்றுகிறாய். வல்வையர்களின் திருமண நிகழ்வுகள், வல்வை மண்ணின் செய்திகள், புலம் பெயர் தேசத்து வல்வைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், மரணச் செய்திகள் எனப் பலவற்றை சுமந்து எம் கைவிரல் நுனியில் எல்லாவற்றையும், தரும் நீ, பல்லாண்டு காலம் புகழ் மங்காது சேவையாற்ற உன் பல்லாயிரம் வாசகர்களில் ஒருவனாய் வாழ்த்துக்கிறேன்.

-அன்புடன் வாசகன்-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here