உதயசூரியன் கடற்கரை உதைபந்தாட்ட சம்பியனாகியது சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம்

0
826 views

வல்வை உதயசூரியன் கழகம் தமது 57ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தி வரும், வல்வை விளையாட்டு கழகத்திற்கு உட்பட்ட சகோதர கழகங்களுக்கிடையிலான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டிகள், வல்வை உதயசூரியன் கடற்கரையில் 23.08.2019 நேற்று மாலை நடைபெற்றது.

இறுதியாட்டத்தில்  ரேவடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதிய சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் சம்பியனாகியது. ஆட்ட நாயகனாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழக வீரன் துளசிராம் தெரிவு செய்யப்பட்டார். ஆட்டங்களுக்காக மைதானத்திற்கு ஒளி அமைப்பை வழங்கியவர்கள் கப்பலுடையவர் மின் அமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here