உதயசூரியன் கழகம் தனது 57வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 13.08.2019 நேற்றைய தினம் நேதாயி விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
முதல் சுற்றில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து றெயின்போ விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் றெயின்போ விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக றெயின்போ விளையாட்டுக் கழக வீீரர் மணிமாறன் தெரிவானார்.
இரண்டாம் சுற்றில் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து நேதாயி விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் நேதாயி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக நேதாயி விளையாட்டுக் கழக வீீரர் தர்சன் தெரிவானார்.
மூன்றாவது சுற்றில் உதயசூரியன் கழகத்தினை எதிர்த்து றெயின்போ விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் உதயசூரியன் கழகம் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக உதயசூரியன் கழக வீீரர் விதுசன் தெரிவானார்.
பின்னர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் நேதாஜி வி.க, உதயசூரியன் கழகத்தினை எதிர் கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 25:22, 25:22 என்ற புள்ளிகள் அடிப்படையில் இரண்டு சுற்றுக்களையும் வெற்றி கொண்டு நேதாஜி வி.க, உதயசூரியனின் 57வது ஆண்டுவிழாவின் இரண்டாவது கிண்ணத்தையும் சுவீகரித்தது.
முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் நேதாஜி மகளீர் அணியினரே கிண்ணம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற நேதாஜி விளையாட்டுக்கழகதினருக்கும், பங்குபற்றிய அனைத்து கழக வீரர்களுக்கும் எமது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.




















