இலங்கை அரசின் அறிவித்தல்……வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு சிக்கல்!

0
761 views

இலங்கையை பூர்விகமாக கொண்டு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டு குடியுரிமையை பெற்றவர்கள் இலங்கையில் காணி உரிமம் கோர முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் ஒருபோதும் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று யாழில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இது குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்

அமெரிக்க பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்தில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், அது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என்பதை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

இந்த விடயத்தினை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here