வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்பாளிள் புதிய திருவிளையாடலுக்கு நாமெல்லாம் உட்பட்டவர்கள்.

0
1,202 views

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்பாளிள் புதிய திருவிளையாடலுக்கு நாமெல்லாம் உட்பட்டவர்கள்.

கோடியாக்கரையிலிருந்து முத்துமாரி அம்பாள் எங்கள் மன்னுக்கு ஓடிவந்து அமர நாங்களெல்லாம் ஏன் பரதேசம் போனோம். எங்களை எல்லாம் பவுத்திரமாக புலம்பெயர் மண்ணுக்கு அனுப்பி வைத்தவள். நாங்கள் வல்வையர்கள் எவருமே எந்த சிதைவும் அடையவில்லை. பனிப்புதையலுக்குள் எவருமே சிக்கவில்லை. மற்றவர்கள் மாதிரி கப்பல்களில் தாண்டு போகவில்லை எம் பெண்களின் கற்புகளுக்கு பங்கம் வரவில்லை. கனடாக்காரர்களை பொன்சர்களில் மிகவும் பவுத்திரமாகவும் ஊரில் வைத்து வணங்கிய தனது புகைப்படங்களுடன் அனுப்பி வைத்தவள்.
நீங்கள் வைத்த நேர்த்திகள் வேண்டுதல்களை எல்லாம் பலர் மறந்து விட்டார்கள்.
2004ல் தனது முற்றம் வரை சுனாமியால் கடல் நீரை கொண்டு வந்தவளக்கு தனது கோபுர உச்சிவரை கொண்டுவரத்தெரியாமல் இல்லை.
நாம் வல்வையில் தற்போது வசிக்காவிட்டாலம் அங்கு அம்பாளின் பெயரால் நடக்கும் சடங்குகள் யாற்றின் பலாபலன்கள் நன்மை தீமைகளுக்கு நாம் பெறுப்பேற்றாக வேண்டும்.
நம் குற்றம் நாம் கொஞ்த்தூரம் ஓடிவந்ததுதான்.
சமூகம் என்பது நல்லவன் கெட்டவன் கொலை களவு குற்றவாளி பொலிஸ் நீதிமன்று இவை எல்லாவற்றையும் அடக்கியதுதான்.
அம்பாள் நடத்திய திருவிளையாடலில் நாம் வல்வையர் எல்லாருமே குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றோம். யார் குற்றப்பணம் கட்டப்போகிறீர்கள். அல்லது யார் சிறை தண்டனை ஏற்கப்போகிறீர்கள்.
அவள் அம்பாள் எங்கள் தாயாரின் தொடராக வந்த மூலம். பாதைகள் தெரிகின்றது இலகுவாக அம்பாளின் சீற்றம் தவிர்த்துக் கொள்ளலாம். நாமெல்லாம் கடந்த பத்து நாட்க்களாக காலி செய்த மதுப்போத்தல்களின் பெறுமதிகள் கணக்கிட்டால் நாகரிகமா இருக்காது. எனது இங்கிலாந்து தேசத்தில் வல்வை நட்புக்குழுக்கள் போட்ட ஆட்டம் பாட்டங்கள் எல்லாம் வடிவாகத்தான் பதிந்து வைத்திருக்கின்றது வல்வையர் வரலாறு.
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் பெயரில் நாலுகண்டத்திலும் கோயில். இது வரை அம்பாளின் பெயர் தன்னை காட்சிப்படுத்தியதற்க்கு விலையாக எவருமே தெட்ச்சணை வழங்கியதாக தெரியவில்லை.
அம்பாளை நினைத்து அம்பாளை நேர்;த்தி வைத்து புலம்பெயர்ந்து வந்த எல்லாருமே அம்பாளின் கடனை அடைக்க வேண்டிய கடைசித்திகதி மார்கழி 31ம் திகதியாக அம்பாள் நிச்சையிக்கிறார்.
தை 1ம் திகதி தைப்பொங்கலிருந்து கோடிமாரி கோடிஸ்வரியாக இருக்க வேண்டும்.
50 லட்ச்சம் கோட் மூலம் கடன் அடைக்கப்பட்டு 150 லட்ச்சம் வைப்பில் இடப்பபடவேண்டும்.
அம்பாள் உங்களிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தவில்லை. அம்பாளின் இறுதிக்கட்டளையாகவும் இருக்கலாம் புரிந்தவர்கள் புத்திசாலிகள்.
நாம் ஒவ்வொரு குடும்பமும் தலா 20 ஆயிரம் படி ஜந்து குடும்பங்கள் சேர்ந்து அனுப்பினால் ஒரு லட்ச்சம் வந்து விடும். ஜந்து பேர் சேர்ந்து அனுப்புதிலிருந்து காசு அனுப்பும் கமிசனிலும் நாம் பெருந் தொகை பணம் மிச்சம் செய்யலாம்.
இங்கிலாந்தில் நட்பு குழுக்களுக்கு அருமையான சந்தர்ப்பம். வல்வையின் கௌரவத்தை நிலை நிறுத்துவதற்க்கு. ஒவ்வொரு நட்புக்குழுவும் குறைந்தது 10 லட்ச்சப்படி தெட்ச்சணையை வழங்குவார்களாக இருந்தால் அம்பாள் தைத்திருநாளில் கோடிகளுக்கு உரித்தானவளாக இருப்பாள். நட்ப்புக்குழுக்கள் அவசர ஒன்று கூடலை ஒழுங்கு செய்து கோடு ஏறி இருக்கும் அம்பாளையும் அவள் மண்ணின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அம்பாளின் கிருபையால் வருகின்ற 06.01.2018ல் கனடா மென்றியல் மக்கள் ஒன்று கூடுகின்றீர்கள். உங்கள் வீடு வாசல் வேலை கௌரவங்களைத் தந்தவள் அம்பாள்தான். நீங்கள் கூடுகின்ற இந்த நாளை புனித நாளாக கருதி சிறு துளி பெரு வெள்ளமாக மாறும். முடிந்தரை குடும்பமாக சேமித்து அம்பாளுக்குரிய படியை அனுப்பி வையுங்கள். முத்துமாரித்தாய் உங்கள் மொன்றியல் நகரிலும் அவதாரம் செய்வாள்.
அவுஸ்திரேலியா வாழ் வல்வை மக்களைப் பற்றி முந்திய கட்டுரையில் சிந்தித்து இருந்தேன். வல்வை முத்தமாரி அம்பாளின் கோட் கடனும் நாளைய பணிக்கான தேவைகளையும் நிறைவு செய்து வைப்பார்கள். ஜந்து நட்பு குடும்பங்களாக இணைந்து கொள்ளுங்கள். நாளை ஒரு நாள் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தை அதே பிரமாணத்துடன் வேறு கண்டத்தில் நி;ர்மானிக்கப்போறவர்கள் நீங்கள்தான்.
அம்பாளின் கடன் அடைக்கப்படுவதும் அம்பாள் கோடிஸ்வரியாவதும் ஊறுதியாகி விட்டது. அம்பாளின் தங்ககிறீடம் காப்பற்றப்பட்டு விட்டது.
இனி கவனத்தில் கொள்ளவேண்டியவர்கள் தற்போது நிரந்தரமாக வல்வையில் வசிப்பவர்கள்தான். ஏதற்கு எடுத்தாலும் வெளி நாட்டு வல்வையர்களிடம் கைஏந்துவதுநிறுத்தப்படவேண்டும். வெளி நாடுகள் போல் சனி ஞாயிறு தினங்களில் இளையசமுதாயம் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து உங்கள் பொது சேவைக்கு செலவு செய்ய வேண்டும். நாங்கள் எமது தேவைக்கும் ஊர்த்தேவைக்கும் என்று குளிர் நாட்டில் 8 10 12 16 என்று பல மணிநேரங்கள் உழைக்க வேண்டியுள்ளது. ஊர்pல் தொழிளார்கள் 6 அரை மணிநேரம் வேலை செய்துவிட்டு குளிர் பாணமும் குடிபாணமும் அருந்திக் கொண்டிருக்கின்றீர்கள்.
புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட வல்வை ஒன்றியம் செயலிழந்து இருக்கின்றது.
முக்கியமான விடயத்துக்கு வருகின்றேன். புலம்பெயர்ந்த பிள்ளைகளின் பாடசாலை விடுமுறைகள் யூலைமாதம் முன் பின் சேர்த்து வருகின்றது. அப்போது அம்பாளின் ஆடிப்பூரம் போன்ற விசேட நிகழ்வுகளை ஜந்து நாட்கள் கொண்டாடினால் பிள்ளைகள் குடும்பங்கள் திருவிழாவை பார்த்த மாதிரியிருக்கும் அவர்கள் ஊரில் ஊர் சாப்பாட்டை அனுபவித்து சென்ற மாதிரியும் இருக்கும். வல்வை மக்களிடம் பெரும் பணப்புளக்கம் ஏற்பபட்டு உறவுகள் பலப்படுவதற்கு சந்தற்ப்பங்கள் ஏற்படும்.
ஆடிப்பூரத்துக்கு முதல் நாலு நாட்க்கள் உலக நாடுகளின் கொடித்திருவிழா. அடுத்து எல்லோருமே குடை பிடிக்கும் குடைத்திருவிழா ஒரு நாள் பெண்பிள்ளைகள் தவணித்திருவிழா. குழந்தைகள் நடனத்திரவிழா விழாக்ளை சிறப்பித்து புலம்பெயர் மக்கள் தாயூர் வருவதற்கு வழிவகுத்தமாதிரி இருக்கும்.
நாம் அம்பாளின் பெயரால் ஏதாவது மாற்று வழிகளில் சிந்தித்து செயல்படாவிட்டால் வல்வை வெற்று ஊராக போய்விடும். இப்போது வருபவர்களும் ;முதுமை எயதி மதுவுக்கு அடிமையாகி ஊர் நினைவே வராமல் வாழ்ந்து முடிப்பார்கள்.
அம்பாளின் தெற்க்கு விதி கல்லு முள்ளு கரடுமுரடாக இருக்கின்றது. பெண்கள் பகுதியாக திருவிழாக்காலங்களில் பெரும்சிரமம் அடைகின்றர்கள். அப்பகுதி செப்பனிடப்பட்டு செங்கற்களால் நடைபாதை அமைக்கப்பட வேண்டும். இரண்டு கோயிலுக்கும் பொதுவாக ஒரு சில மலசலகூடங்ள் அமைக்கப்படவேண்டும் . கலியாண மண்டபத்திலும் ஒரே ஓரு மலசலகூடந்தான் உள்ளது. குளிர் சாதனவசதிகள் இன்னும் பன் மடங்கு பூட்டப்பட வேண்டும். திருவிழாக்காலங்களில் பகல் வடக்கு வீதியில் பெண்களுக்கு சுவருடன் மடிக்க கூடிய கன்வஸ் தாழ்வாரங்கள் கண்டிப்பாக பெருத்தப்படவேண்டும்.
காண்டவன வெயில்காலம் மிகவும் கொடுமையாக இருக்கின்றது.
புலம்பெயர் மக்களின் ஆசீர்வாதங்கள் இல்லாமல் இறுதியாகவும் அறுதியாகவும் கட்டப்பட்டது அந்த கலியாணமண்டபமாகத்தான் இருக்க வேண்டும்.

இனிய
சோ.செ.தெய்வச்சந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here