விழிப்புணர்வு நடை பவனி

0
694 views

வல்வெட்டித்துறை நகர சபை பிரதேசத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்திட்டத்தின் கீழ் வடமராட்சி நல்லொழுக்க கழகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக பசுமைச் சூழல் பேண! கடல் வளம் பேண! பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நடை பவனி நேற்று (13.06.2019) காலை 8:00 மணிக்கு வல்வை மகளீர் பாடசாலை மைதானத்திலிருந்து நகராட்சி மன்றம் வரை நடாத்தப்பட்டது.

நகர சபையின் கௌரவ தவிசாளர் கோ.கருணானந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நடைபவனியில் சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலாக அலுவலர்கள், வடமராட்சி நல்லொழுக்க கழக அங்கத்தவர்கள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். நடைபவனியின் போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here