நிழலாய் என்றும் உதவுவோம். தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளுக்கான உதவி

0
334 views

தாயகத்தில் நடந்துமுடிந்த போரானது எமது தமிழ்மக்கள் மீது அதிலும் சிறார்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஏற்படுத்திய வடுக்கள் மிகவும் கொடூரமானவை. துள்ளித்திரிந்து விளையாடி படிக்கும் பருவத்தில் வறுமையிலும் பட்டினியிலும் எமது சிறார்கள் வாடிவருகின்றார்கள். அதிலும் பெற்றோரை இழந்த குழந்தைகள், சிறார்களின் நிலைமை மிகமிக கொடுமையானதாக இருந்துவருகின்றது.
அரவணைக்க அன்னை தந்தை இல்லாத அவர்களின் எதிர்காலம் முழுதும் பற்றாக்குறையிலும், வறுமையிலுமே கரைந்து போய்விடும் பெரும் அபாயம் தெரிகின்றது.

இத்தகைய சிறார்களுக்கான உதவி,நிவாரணம் என்பன இரண்டுவிதமான அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனபதை நிழல்கள் அமைப்பு புரிந்துவைத்துள்ளது.முதலாவது குறுகியகால உதவும்திட்டங்கள்.தினசரி அந்த சிறார்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உதவிகள் அதற்குள் அடங்கும்.
இரண்டாவது நீண்டகால உதவித்திட்டம்: இதில் அந்த சிறார்களின் எதிர்காலத்துக்கான தேவைகளை அணுகக்கூடிய விதத்தில் இப்போதே உதவிகளை செய்வது என்பது.
நிழல்கள் உதவும் அமைப்பு இந்த இரண்டாவது திட்டத்தின் அடிப்படையில் பெற்றேரை இழந்து தாயகத்தில் வாடும் சிறார்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது சுயமான பொருளாதார அடித்தளம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்போதே அவர்களின் பெயரில் வங்கியில் ஒருதொகையினை நிரந்தர வைப்புசெய்து அதனை அவர்கள் தமது பதினெட்டாவது வயதில் மட்டுமே எடுக்ககூடியதாக செய்வதுஆகும்.இதற்கும் முன்னரும் பல நலத்திட்டங்களை தாயகத்துக்கு மக்களுக்கு ஏற்படுத்திவந்துள்ள நண்பர்கள் பலர் இணைந்து இப்போது நிழல்கள் உதவும் அமைப்பு என்ற பெயரில் தமது உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக,முதற்தொகுதியாக 20 சிறார்களுக்கு அவர்களின் பெயரில் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எப்போதும் யாரையும் தங்கிவாழும் ஒரு சமூகமாக எமது சிறார்கள் எதிர்காலத்தில் தன்னும் வாழக்கூடாது என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த உதவும் திட்டம் ஒரு உன்னதமான நலத்திட்டமாகும்.

நிழல்கள் உதவும் அமைப்பு நண்பர்கள் (லண்டன்)
E-mail :- nizhalkala@hotmail.com
tel: +44 7886 393116

யுத்தத்தில் தனது தாய் தந்தையரை இழந்து வல்வெட்டத்துறையில் தனது பாட்டியாருடன் வாழ்ந்து வரும் சிறிமி தாமரைச்செல்வன் மதி அவர்களுக்கு ரூபா 11000/=  நிரந்தர வைப்பு பணமாக Pan asia bank இல் வடமாகாண உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடாக (05-01-2016 )  நிழல்கள் உதவும் அமைப்பு நண்பர்கள் வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here