மீண்டும் சம்பியனாகியது இளங்கதிர் அணி

0
572 views

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கு இடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதி ஆட்டம் (01.06.2019) நேற்று மாலை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.

சைனிங்ஸ்A அணியினை எதிர்த்து மோதிய இயங்கதிர்A அணியானது 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது. இளங்கதிர்A அணி சார்பாக கபில் இரு கோல்களையும், தனுசன் ஒரு கோலினையும் பெற்றுக்கொடுத்தனர். மேலும் மற்றைய கோலானது ஒன்கோல் முறை மூலம் பெறப்பட்டது.

போட்டியின் ஆட்டநாயகனாக இளங்கதிர் விளையாட்டுக் கழக வீரன் கபில்ராஜ், தொடராட்ட நாயகனாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழக வீரன் பிரசாந், சிறந்த கோல்காப்பாளராக இளங்கதிர் விளையாட்டுக் கழக வீரன் கஜிதரன், சிறந்த பின்கள வீரனாக இளங்கதரிர் விளையாட்டுக் கழக வீரன் விதுஷன் Nகியோர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இளங்கதிர் அணியானது இச்சுற்றுத்தொடரின் ஐந்து இறுதியாட்டங்களிலும் மோதியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் சம்பியனாகியுள்ளது. இரண்டாமிடத்தினை சைனிங்ஸ்A அணியும் மூன்றாமிடத்தினை ரேவடிA அணிகளும் பெற்றுக்கொண்டன.

வெற்றிபெற்ற இளங்கதிர்A அணிக்கு20000ரூபா பணப்பரிசிலுடன் வெற்றி கிண்ணமும் இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்ட சைனிங்ஸ்A அணிக்கு 15000ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் மூன்றமிடத்தினை பெற்றுக்கொண்ட ரேவடிA அணிக்கு 5000ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here