முதலாவது நாள் போட்டிகள் வல்வை றெஜின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை ஆரம்பமாகின. முதலாவது போட்டி பி.ப 3.30 மணியளவில் சைனிங்ஸ் எதிர் நேதாஜி அணிகள் மோதின. பரபரப்பாக இடம்பெற்ற முதல் பாதி எதுவித கோலுமின்றி முடிவுற்றது.இரண்டாவது பாதியில் சைனிங்ஸ் அணிக்காக பிரசாந் கோலினை பதிவு செய்ய இறுதியில் சைனிங்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று லீக் சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

உதைபந்தாட்டச்சுற்று போட்டியின் இரண்டாது போட்டியாக தீருவில் எதிர் உதயசூரியன் வி.கழகம் மோதியது. ஆட்டம் எதுவித கோல்களுமின்றி சமநிலையில் முடிவுற்றது.










