பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் வலைப்பந்தாட்டத்தில் இவ்வருடச்சம்பியனாகியது பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் இறுதியாட்டத்தில் அல்வாய் நக்கீரன் விளையட்டுக்கழகமும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தின் முதல்பாதியில் 9:6 என்று பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் முன்னிலை பெற்றது.
இடைவேளையின் பின் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் மாறிமாறி கோல்போட்டு அசத்தினர். இறுதியில் 18:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம்.







