மஹோதய புண்ணிய தீர்த்தோற்சவம் ஊறணி ஊற்றில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது

0
690 views

மஹோதய புண்ணிய தீர்த்தோற்சவம் ஊறணி தீர்த்த சமுத்திரத்தில் இன்றைய தினம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது


இன்று (04.02.2019) மஹோதய புண்ணிய தீர்த்த உற்சவம் வல்வையில் வரலாற்று சிறப்புமிக்க ஊறணி தீர்த்த சமுத்திரத்தில் இடம்பெற்றது. வல்வை மாநகரின் பெரும்பாலான பக்தர்கள் புடைசூழ நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார், வல்வெட்டி சித்திவிநாயகர் நாராயணசாமி, மானாங்கானை பராசக்தி அம்மன், புட்கரணிப்பிள்ளையார் ,கப்பலுடையவர், வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன், வயலூர்முருகன், வன்னிச்சி அம்மன், மாடந்தை பிள்ளையார், ஆதிவைரவர் போன்ற 10 ஆலய சுவாமிகள் ஒன்றாக ஊறணி தீர்த்த சமுத்திரத்தை சென்றடைந்து தீர்த்தமாடி ஆலயம் திரும்பினார்கள். 60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதய புண்ணிய தீர்த்த உற்சவம் ஆகும். இன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடி, பித்ரு பூஜைகள் செய்வது பல மடங்கு பலனைத் தரும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here