வேகக்கட்டுப்பாட்டை இழந்த நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான புதிய பிக்கப் வாகனம் வல்லைப் பாலத்துள் பாய்ந்ததில் மூவர் படுகாயமடைந்தனர்.
நேற்றுக்காலை பருத்தித்துறையில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த வாகனம் பாலத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்சாரக்கம்பத்தையும் தள்ளிக்கொண்டு நீரேரியுள் பாய்ந்துள்ளது.