வல்வை பட்டப்போட்டி 2019 – முதல் பரிசு 1 பவுண் தங்கநாணயம், 30 பட்டங்களுக்கு பரிசுகள்

0
948 views

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தால் தைப்பொங்கல் தினத்தன்று நடாத்தப்படும் பட்டப்போட்டித்திருவிழா இந்த வருடம் 15.01.2019 ஆம் திகதி வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
முதற்பரிசு பெறும் பட்டத்திற்கு ஒரு பவுண் தங்க நாணயம் பரிசு வழங்கப்படவுள்ளதுடன், 30 பட்டங்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியில் வழங்கப்படவுள்ளன.
வட பகுதியில் அதிக மக்கள் வருகை தரும் (சுமார் 40 ஆயிரம் மக்கள்) கலை நிகழ்வான பட்டப்போட்டிக்கு போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினர் அன்போடு அழைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here