தேசிய மட்டகோலூன்றிப் பாய்தலில் முதலிடம் யாழ்.சாவகச்சேரி இந்து

0
548 views

தேசிய மட்டத்திலான 18 வயது பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி நே.டக்சிதா புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.


கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டியில் நே.டக்சிதா 3.02 மீற்றர் உயரத்தை பாய்ந்து புதிய சாதனை நிகழ்தியதுடன் தங்கம் வென்றுள்ளார்.கடந்த வருடம் யாழ். தெல்லிப்பளை கமாஜனக் கல்லூரி மாணவி ஹெரீனா 3.01 மீற்றர் உயரத்தை பாய்ந்து சாதனை படைத்திருந்தார்.

அந்தச் சாதனையை நே.டக்சிதா 3.02 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். மேலும் 2.90 மீற்றர் உயரத்தை பாய்ந்து ஹெரீனா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here