கண்ணீர் அஞ்சலி
திரு பாலசந்திரன் அவர்கட்கு
பாலிமாமா பாலிமாமா என்று எங்கள் வீட்டில் எல்லோரும் கூப்பிடுவோம் ஆனால் எங்களுக்குச் சொந்தமில்லை
எங்கள் அப்பாவின் நண்பனுக்கு நண்பனாக வந்த
சொந்தம் தான் பாலிமாமா.
பாலிமாமா வீட்டிற்கு வந்தால் சிரித்த முகம்தான்
கோபத்தைப்பார்த்ததே கிடையாது!
எதை எடுத்தாலும் அப்பாவுடனும் எங்களுடனும் பகிடிக்கதை தான்இ
ஏய் பொன்னா இஇஇ என்று அப்பாவை கூப்பிடும் விதம் இன்றும் மறக்க முடியவில்லை.
அப்பா இறந்த செய்தி கேட்டு கண்ணீர் சிந்திய
அன்பு நண்பன் பாலிமாமா.
வயசான காலத்திலும் மாமாவை பார்க்கப்போனால் அப்பாவுடன் பழகிய நட்பை நினைத்து எங்களை கட்டிப்பிடித்து கண் கலங்கி விடுவார்.
என்றும் எங்கள் நினைவை விட்டு
அகலாது அவரது
ஆத்மா சாந்தியடையட்டும்
நன்றி
கண்ணீருடன்
பொன்னம்பலம் குடும்பம்
(காளி கோவில்)