யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று போராட்டம்!

0
802 views

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துயும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள், தாதியர் பிரச்சனைகள், தனியார் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களால் ஏற்படும் பாதிப்புக்கள் எனப் பல்வேறு விடயங்களை முன்வைத்தும் இன்று பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணை மருத்துவ அலகில் உள்ள தாதியியல் பாடநெறிக்கான பதிவு மற்றும் அங்கீகாரத்தை வழங்கக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இணை மருத்துவ விஞ்ஞான பிரிவு மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.

 

யாழ்ப்பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் இருந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் பலாலி வீதியூடாக பேரணியாக வந்து யாழ் பல்கலைக்கழக பிரதான முன்றலில் போராட்டத்தை நிறைவு செய்திருந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒரு அலகாக செயற்பட்டுவரும் இணைமருத்துவ பிரவில் மருந்தகவியல்இமருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், தாதியியல் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இதில் தாதியியல் கற்கை நெறிக்கு இதுவரை பதிவும் அங்கிகாரமும் வழங்கப்படவில்லை.

இதற்கான அங்கிகாரத்தை வழங்கும் படி கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

 

இப்பாடநெறிக்கான பதிவும் அங்கிகாரமும் இல்லாத காரணத்தினால் சேவைகளில் பதவிப்பிரமானம். பதவி உயர்வு, வேலைவாய்ப்பு, உயர் கல்வி கற்பதற்கான தடை போன்ற பல்வேறு பிரச்சனைக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறுப்புக் கூறவேண்டிய அமைச்சு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்து எமது கோரிக்கைகளை பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை தீர்வு கொடுக்கப்படவில்லை, இனி எம்மை சமாளிப்பதற்கான வாக்குறுதிகள் வழங்குவதை நிறுத்தி இந்த பிரச்சனைக்குரிய தீர்வை எந்த முறையில் கையாளப்போகிறார்கள் என்றும் எந்த காலப்பகுதிக்குள் இதற்கான தீர்வை வழங்க முடியும் என்றும் எழுத்துமூல உத்தரவாதத்தை எமக்கு வழங்க வேண்டும் என மேற்குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here