இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெறவுள்ள செயலமர்வொன்றில் கலந்துகொள்வதற்குசெல்லலவிருந்த வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீசா அனுமதியை இந்தியஅரசு நிராகரித்திருக்கின்றது.
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் திருமுருகன் காந்திஉள்ளிட்ட செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து கடுமையான ஒடுக்கு முறைகளைகட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையிலேயே இந்திய அரசினால் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாககுரல்கொடுத்துவரும் அரசியல் வாதியான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீசா விண்ணப்நிராகரிக்கப்பட்டிருக்கி
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கடவுச் சீட்டில்உள்ள சிக்கலை அடுத்தே வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர்அலுவலகம் அறிவித்துள்ளது.
எனினும் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போதுஇடம்பெற்ற போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிராக கொடூரங்கள் தொடர்பில்விசாரணை நடத்த தொடர்ந்தும் சிறிலங்கா அரசு தவறிவருவதால், போர் குற்ற விசாரணைகளை சர்வதேச போர் குற்ற நீதிமன்றிற்குபாரப்படுத்துவதற்
அது மாத்திரமன்றி அரசியல்தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த மைத்ரி- ரயில் தலைமையிலானசிறிலங்காாவின் தற்போதைய தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் தவறிவருவதால் ஐக்கிய நாடுகள்சபையின் மேற்பார்வையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பைநடத்தி தமிழ் மக்களுக்கான சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே வட மாகாண சபையின் உறுப்பினர்எம்.கே.சிவாஜிலிங்கத்
ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தினால் இந்த செயலமர்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள அதேவேளை இதற்கான நிதி உதவியை அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது.
மாகாண சபைகளின் செயற்பாடுகளை மையப்படுத்திய இந்த செயலமர்வுகள் தொடர்ச்சியாகநடைபெற்று வருகின்றன. இதற்கமைய இந்தியத்தலைநகர் புது டெல்லி மற்றும் கொல்கத்தாஆகிய நகரங்களில் இதற்கு முன்னர் நடைபெற்ற செயலமர்வுகளிலும் வட மாகாண சபையைபிரதிநிதித்துவப்படுத்தி இரு குழுக்கள் கலந்துகொண்டிருந்தன. இதன்போது அங்குசென்றிருந்த வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் எழுந்திருக்காதநிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் உறவினரும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் தொடர்ச்சியாககுரல்கொடுத்து வருபவருமான வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீசாஅனுமதியை இந்திய அரசு நிகராகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








