உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் புதிய புத்தகம் – கி.செ.துரை.

0
607 views
உலகத்தின் தலை சிறந்த பத்து உதைபந்தாட்ட லெஜன்ட்களின் வாழ்க்கையின் வெற்றி வரலாற்றை புதிய நூலாக எழுதியிருக்கிறார் டென்மார்க்கில் இருந்து கி.செ.துரை.
உதைபந்தாட்டத்தை தொழில் முறையாகக் கொண்ட நாடுகளில் உள்ள உதைபந்தாட்ட  மாணவர்களுக்கும், வீரர்களுக்கும் வழங்கப்படும் சிறப்பான விளையாட்டு தொழில் நுட்பங்களை எல்லாம் தமிழ் மொழியில் தருகிறது இந்த நூல்.
கோயில் கட்டி கும்பிடப்படும் மரடோனா முதல் உலகில் தனிமனிதனாக அதிக பணம் உழைத்த கிறிஸ்டியானோ றொனால்டோ, மெஸி வரை பத்துப்பேருமே வருடந்தோறும் உலத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும் தங்கப்பந்தை வென்ற வீரர்களாகும்.
வாழ்க்கையை எப்படி வென்றார்கள், உலகக்கிண்ணத்தையும் லீக் கிண்ணங்களையும் எப்படி வென்றார்கள். சுவாரஸ்யமான ஆட்டங்களின் பின்னால் நடந்த இரகசியங்கள் என்ன.. என்று பல கோணத்தில் தகவல்கள் தரப்படுகின்றன.
இந்தப் பத்துப்பேரும் உலகின் பல நாடுகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். உதைபந்தாட்டம் மட்டுமல்ல வாழ்க்கையில் வெற்றி பெற எப்படி போராடினார்கள் என்பதும் விளக்கப்படுவதால் ஒவ்வொருவரும் தவறாது வாசிக்க வேண்டிய தன்னம்பிக்கை நூலாகவும் இருக்கிறது.
தாயகத்தில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், இலங்கைத் தீவைத்தாண்டி சர்வதேச வெற்றி பெற இருக்கும் வழி முறைகள் என்ன..?
உலகத்தின் முக்கிய உதைபந்தாட்ட பாடசாலைகளுக்கு போய் சர்வதேச வீரனாவது எப்படி என்ற வழிகாட்டுதல்களும் ஆங்காங்கு தரப்படுகின்றன.
அன்று இப்படியொரு நூலை நமது பாடசாலைகள் தரவில்லை, இன்றும் தந்ததா என்பதும் தெரியவில்லை. ஆகவே மிக அவசியமான ஒரு பணியாக இந்த நூல் சர்வதேச தரத்தில் தெளிவான தமிழ் நடையில் வெளி வருகிறது.
சர்வதேச உதைபந்தாட்ட நுட்பங்களை விளக்கினாலும் அதை நமது மக்களுக்கு ஏற்றவாறு எப்படி விளக்குவது என்ற கோணத்தில் சிந்திக்கப்பட்டு பொருத்தமான உவமைகள், உதாரணங்கள், புகைப்படங்கள் யாவ��ம் தரப்பட்டுள்ளன.
உதைபந்தாட்ட வீரர் மட்டுமல்ல அனைத்து விளையாட்டு வீரர்களும், கூடவே வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய தன்னம்பிக்கை நூலாகவும் இருக்கிறது.
இந்த வீரர்களின் வெற்றி இரகசியங்கள் பற்றி தமிழில் வெளிவராத எண்ணற்ற தகவல்கள் இந்த நூலில் உள்ளன. அனைத்து கழகங்களும், பாடசாலைகளும் இதை வாங்க வேண்டும். பழைய மாணவர் சங்கங்கள், வெளிநாடுகளில் உள்ள ஊர் சங்கங்கள் இதை வேண்டி பாடசாலைகளுக்கும், கழகங்களுக்கும் வழங்கி உதவ வேண்டும்.
இலங்கையில் ரியூப்தமிழ் நிறுவனம் புத்தகங்களை விற்பனை செய்ய இருக்கிறது. மிகவும் மலிவு விலையில் இலாப நோக்கற்று சேவை அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த வாரம் வெளிவருகிறது.
உலகின் பல நாடுகளிலும் வெளியாவதால் இலங்கைக்கு 500 புத்தகங்கள் மட்டுமே வருகின்றன.
இந்த நூலை பிரதி பார்த்த சிங்கப்பூரில் உள்ள ஐ.ரி நிபுணர் முத்து பாண்டியர் படித்த பின் எழுதிய குறிப்புரை இப்படியுள்ளது.
இந்த நூலை வாசிக்கும் வாய்ப்பை எமக்கு வழங்கிய தோழருக்கு முதலில் எனது நன்றிகள்…
இது போன்ற ஒரு தன்னம்பிக்கை நூலை நான் வாசித்ததே இல்லை தோழர்களே, பெரும்பாலும் தன்னம்பிக்கை நூலானது ரொம்ப வேகா சொல்லி இருப்பார்கள், ஆனால் இந்த நூலானது, ஒவ்வொரு வீரனும் நமக்குள் இருக்கும் நம்பிக்கையை அசாதாரணமாக மாற்றிவிடுகிறார்கள், அதோடு ஒவ்வொரு வீரனுக்கும் பொருத்தமான மேற்கோள்கள் எல்லாம் அபாரமாக பொருந்திப்போகிறது, அதோடு நமது அண்ணன் மேதகு செல்வாபாண்டியரின் கருத்துக்களையும் இணைத்து பேசியிருப்பது தனித்துவமான ஆளுமையாக இருக்கிறது,
தலைப்பை பார்த்துவிட்டு யாரும் விளையாட்டு வரலாறு என்று விளையாட்டாக நினைத்து விட வேண்டாம் தோழர்களே, அனைத்தும் அரசியல் பேசுகிறது, நமக்குள் தெளிவாக பல யுக்திகளை கடத்திவிடுகிறது , ஒரு எழுத்தாளன் தனது எழுத்துகளை வாசிப்பவர்களை ஒருவித மாற்றத்திற்கு உட்படுத்தி, தன்பால் ஈர்க்க வேண்டும்… கண்டிப்பாக அப்படியான ஒரு நூல்தான் இந்த உலகப்புகழ்பெற்ற 10 உதைபந்தாட்ட வீரர்கள்,
இதற்காகவே சிங்கப்பூரில் வெளியிடுவதற்கு தயாராகி வருகிறோம்…
ஏற்கனவே நடுவத்தின் சார்பாக ஒரு வாழ்த்தை அனுப்பியிருந்தேன், மீண்டும் சொல்கிறேன், நடுவத்தின் சார்பாக எனது வாழ்த்துகள் தோழர்…
சிங்கப்பூர்
தகவல்
முத்து பாண்டியர்
——————-
இந்த நூலில் எனக்கு பிடித்த விடையங்கள்
1. அட்டைப்படம் 10 வீரர்களை வடிவமைத்த விதம்
2. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊச்டூசி
3. உள்ளுக்குள் வீரர்களின் ஓவியங்கள்
4. ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றாற்போல தேர்ந்தெடுத்த உதாரணங்கள் செல்வா பாண்டியரின் கருத்துகள்.
5. எழுத்து நடை, திரைப்படத்திற்கு Screen Play எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு எழுத்து நடை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here