இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையிலும் சூடு பிடிக்கும் வடக்கு கிழக்கு பிரீமியர் லீக்(NEPL) போட்டிகள்….

0
779 views

ஒன்பது சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ரில்கோ அணி மட்டுமே பிளே ஒப் சுற்றுக்கு தகுதி அடுத்து 5 அணிகள் பிளே ஓவ் வாய்ப்புக்காக போராட்டம் 6 அணிகள் பிளே ஓவ் வாய்ப்பை இழந்துள்ளன.
இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையிலும் சூடு பிடிக்கும் வடக்கு கிழக்கு பிரீமியர் லீக்(NEPL) போட்டிகள்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கடந்த மே மாதம் யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமாகிய முதலாவது வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் இறுதிக் கட்டத்தினை நெருங்கியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக பிறிமியர் லீக் வடிவிலான சுற்றுத்தொடரில், வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் களமிறங்கியுள்ள இத் தொடரில், 66 லீக் போட்டிகள் மற்றும் ப்ளே ஓவ் இறுதிப்போட்டிகளை கொண்ட மிக நீண்ட தொடராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் இருந்து நான்கு அணிகளும், மன்னார் மாவட்டத்திலிருந்து இரண்டு அணிகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒரு அணி என மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ள இந்த சுற்றுத் தொடர், மொத்தம் 11 சுற்றுக்களை கொண்டதாக நடைபெறுகிறது. இதில் 8வது சுற்றின் போட்டிகள் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் நடாத்தப்பட்ட அதே வேளை மற்றய அனைத்து சுற்றுக்களுடன்இ ப்ளே ஓவ் மற்றும் இறுதிப் போட்டிகளும் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

முதலாவது வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் இது வரை முடிவடைந்துள்ள 09 சுற்றுக்களின் முடிவில்,ஒரு அணி மட்டுமே பிளே ஓவ் வாய்ப்பை பெற்றுள்ளது. ஏனைய 3 இடங்களுக்கும் மற்றைய அணிகளால் தங்களுக்கான ப்ளே ஓவ் வாய்ப்பினை உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

ரில்கோ எப்.சி அணியினர் கிளியூர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து, தற்போது எட்டு வெற்றிகளுடன் மற்றும் ஓர் தோல்வியுடன் 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

கிளியூர் கிங்ஸ் அணியினர் தங்களின் எஞ்சிய போட்டிகளை வெற்றியுடன் முடிக்கும் பட்சத்தில், 25 புள்ளிகளை பெறுவார்கள். மன்னார் எப்.சி மற்றும் வல்வை எப்.சி அணியினருக்கு எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டி அவர்கள் இரு அணியினருக்குமிடையில் உள்ளது. எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்று, அவர்களுக்கிடையிலான போட்டியை சமநிலையில் முடிக்கும் பட்சத்தில், அவர்கள் இரு அணியினராலும் 24 புள்ளிகளை பெற முடியும். அதே போல் வவுனியா வோறியஸ் எப்.சி அணியினரும் தங்களின் எஞ்சிய போட்டிகளை வெற்றியுடன் முடிக்கும் பட்சத்தில், அவர்களாலும் 24 புள்ளிகளை பெற முடியும். அதே போல் முல்லை பீனிக்ஸ் எப்.சி அணியின் எஞ்சிய ஆட்டங்களை வெற்றியுடன் முடிக்கும் பட்சத்தில் 21 புள்ளிகளை பெற முடியும்.

நேற்று வரை ப்ளே ஓவ் ற்கு தங்களை தெரிவு செய்வதற்கு கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி வந்த, தமிழ் யுனைற்ரட் எப்.சி அணியினர்இ நேற்றய முல்லை பீனிக்ஸ் எப்.சி அணியினருக்கு எதிரான முக்கியமான போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் துரதிஸ்ரவசமாக ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பினை இழந்துள்ளனர்.

தற்போத 09வது சுற்று ஆட்டங்கள் நிறைவின் பின்னான அணிகளின் நிலைகளின் படி ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும் ஏனைய 03 அணிகளுக்கான போராட்டத்தில் வல்வை எப்.சி, மன்னார் எப்.சி, கிளியூர் கிங்ஸ் , வவுனியா வோறியஸ் மற்றும் முல்லை பீனிக்ஸ் ஆகிய ஐந்து அணிகள் போராடுகின்றன.

அணிகளும் அவர்களின் நிலைகளும் பின்வருமாறு;

01. ரில்கோ எப்.சி (யாழ் மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள ரில்கோ எப்.சி அணியினர் கிளியூர் கிங்ஸ் எப்.சி அணியினருடனான போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து, எட்டு வெற்றிகள் மற்றும் ஓர் தோல்வியுடன் 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார்கள்.

02.வல்வை எப்.சி (யாழ் மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள வல்வை எப்.சி அணி ரில்கோ எப்.சி அணியினருடனான போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து, ஆறு வெற்றிகள், இரண்டு சமநிலைகள் மற்றும் ஓர் தோல்வியுடன் 20 புள்ளிகளை பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ளது. மன்னார் எப்.சி அணியினரும் 20 புள்ளிகளை பெற்றிருந்தாலும் கூட கோல் விகிதத்தின் படி வல்வை எப்.சி அணி (18) இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளனர்.

03. மன்னார் எப்.சி (மன்னார் மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள மன்னார் எப்.சி அணி ரில்கோ எப்.சி அணியினருடனான போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து, ஆறு வெற்றிகள், இரண்டு சமநிலைகள் மற்றும் ஓர் தோல்வியுடன் 20 புள்ளிகளை பெற்று தரவரிசையில் மூன்றாம் இடத்திலுள்ளது. வல்வை எப்.சி அணியினரும் 20 புள்ளிகளை பெற்றிருந்தாலும் கூட கோல் விகிதத்தின் படி மன்னார் எப்.சி அணி (07) மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளனர்.

04. கிளியூர் கிங்ஸ் எப்.சி (கிளிநொச்சி மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள கிளியூர் கிங்ஸ் எப்.சி அணியினர் ஆறு வெற்றிகள், ஒரு சமநிலை மற்றும் இரண்டு தோல்விகளுடன் 19 புள்ளிகளை பெற்று தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ளனர்.

05. வவுனியா வோறியஸ் எப்.சி (வவுனியா மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள வவுனியா வோறியஸ் எப்.சி அணியினர் ஆறு வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ளனர்.

06. முல்லை பீனிக்ஸ் எப்.சி (முல்லைத்தீவு மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள முல்லை பீனிக்ஸ் எப்.சி அணியினர்  ஐந்து வெற்றிகள், மற்றும் நான்கு தோல்விகளுடன் 15 புள்ளிகளை பெற்று தரவரிசையில் ஆறாம் இடத்திலுள்ளனர்.

07. தமிழ் யுனைற்ரட் எப்.சி (யாழ் மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள தமிழ் யுனைற்ரட் எப்.சி அணியினர் மூன்று வெற்றிகள், மூன்று சமநிலைகள் மற்றும் மூன்று தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று தரவரிசையில் ஏழாம் இடத்திலுள்ளனர்.

08. ரிங்கோ ரைட்டன்ஸ் எப்.சி ( திருகோணமலை மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள ரிங்கோ ரைட்டன்ஸ் எப்.சி அணியினர் மூன்று வெற்றிகள், ஒரு சமநிலை மற்றும் ஐந்து தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று தரவரிசையில் எட்டாம் இடத்திலுள்ளனர்.

09. நொதேன் எலியற் எப்.சி (யாழ் மாவட்டம்)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள நொதேன் எலியற் எப்.சி அணியினர் இரண்டு வெற்றிகள், இரண்டு சமநிலைகள் மற்றும் ஐந்து தோல்விகளுடன் 08 புள்ளிகளை பெற்று தரவரிசையில் ஒன்பதாம் இடத்திலுள்ளனர்.

10. மாதோட்டம் எப்.சி (மன்னார் எப்.சி)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள மாதோட்டம் எப்.சி அணியினர்  ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஏழு தோல்விகளுடன் 04 புள்ளிகளை பெற்று தரவரிசையில் பத்தாம் இடத்திலுள்ளனர்.

மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் எப்.சி அணியினரும் 04 புள்ளிகளையே பெற்றுள்ள போதும், கோல் விகிதத்தின் படி மாதோட்டம் எப்.சி (-7) பத்தாம் இடத்தில் உள்ளனர்.

11. மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் எப்.சி (மட்டக்கிளப்பு)
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் எப்.சி அணியினர்  ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஏழு தோல்விகளுடன் 04 புள்ளிகளை பெற்று தரவரிசையில் பத்தாம் இடத்திலுள்ளனர். மாதோட்டம் எப்.சி அணியினரும் 04 புள்ளிகளையே பெற்றுள்ள போதும், கோல் விகிதத்தின் படி மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் எப்.சி (-14) பதினோராம் இடத்தில் உள்ளனர்.

12. அம்பாறை அவேஞ்சஸ் எப்.சி
இது வரை 09 போட்டிகளில் பங்குபற்றியுள்ள அம்பாறை அவேஞ்சஸ் எப்.சி அணியினர் இதுவரை எந்தவித வெற்றியையும் பெற்றுக்கொள்ளாத அதே வேளை, ஒரு சமநிலை மற்றும் எட்டு தோல்விகளுடன் 01 புள்ளிகளை பெற்று தரவரிசையில் இறுதி இடத்திலுள்ளனர்.

முதல் 09 வது சுற்று ஆட்டங்கள் முடிந்த பின்னர் கூட இது வரை ப்ளே ஓவ் வாய்ப்பினை உறுதிப்படுத்த முடியாத நிலையில் அணிகள் உள்ளது என்பது இந்த சுற்றுத் தொடருக்கு ஓர் ஆரோக்கியமான விடையமாகும்.

எனினும் தற்போது ஆரம்பமாகவுள்ள 10வது சுற்று ஆட்டங்களின் முடிவில் ஒரு சில அணிகள் தங்களின் ப்ளே ஓவ் வாய்ப்பினை உறுதிப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக எதிர்பாக்கப்படுகிறது. மற்ற இடங்களுக்களை பிடிக்கும் அணிகள் 11வது சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் தான் உறுதிப்படுத முடியும்.

இவ்வாறான ஓரு இக்கட்டான நிலை அனைத்து அணிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலையில் இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் ரசிகர்களாகிய எமக்கு அருமையான விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சுற்றுத் தொடரில் பங்குபற்றும் அனைத்து அணிகளுக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் எமது பக்கம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

-வல்வை மதன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here