சிகைஅலங்காரம் தொடர்பாக அழகக சங்கங்களின் சம்மேளனத்துடனான சந்திப்பு
“பாடசாலைகளில் ஒழுங்கு,கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலை முடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளதால், மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத் தில் மாணவர்கள் பாடசாலை களுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப் பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.” இவ்வாறு அண்மையில் வடமாகாண அழகக அலங்கரிப் பாளர் சங்கத்தின் தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் மற்றும் செயலாளர் கதிரமலை நககராசா ஆகியோருட னான சந்திப்பில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் அண்மையில் இடம் பெற்ற சந்திபபில் பாடசாலை மாணவர்களின் தலை முடி வெட்டுக்கள விரும்பத்தகாத முறைகளில் வெட்டப்படுவது தொடர்பாகக் கலந்துரையாடிய சந்திபபில் அழகக சங்கங்களின் சம்மேளத்தின் வடமாகாண தலைவர். திரு.கதிரமலை நாகராசா, மாவட்ட தலைவர் திரு.ஆனந்தராசா உதயசங்கர் ஆகியோரின் சந்திப்பின் பொழுது பின்வரும் வகையில் செயறபடுவதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்
அந்த வகையில் மாணவர்களின் தலைமுடிகளைச் சீர் செய்யும் பொழுது, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவதாகவும்,இது தொடர்பாக வடமாகாணத்தில் உள்ள தமது சங்க உறுப்பினர் களுக்கு அறிவித்துச் செயற்படுத்துவதாகவும் உறுதி அளித்ததுடன், சில பெற்றோர்களே தமது பிள்ளைகளைத் தவறாக வழி நடத்தும் வகையில், இவ்வாறான தலை முடி வெட்டுக்களை ஊக்கு விக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
• அதற்கமைய மாணவர்களின்,தலைமுடி கட்டை யாக வெட்டப்பட்டும் பின்புறம்“ப” வடிவத் தில் முறையாக வெட்டப்பட்டும் இருத்தல் வேண்டும்.
• சேட் கொலரிலிருந்து தலைமயிர் 1 அங்குலத் திலும் (2.5cm) கூடிய இடைவெளியில் இருத்தல் வேண்டும்.
• பக்கத் தோற்றம் (ளுனைந ஏநைற) “ப”வடிவத்தில் சீராக்கப்பட்டு காதுக்குமேல் இருக்கவேண்டும். அதன் கீழ் நீண்டிருக்க கூடாது.
• தலைமுடியின் நீளம் அரை அங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
• தலையில் வரிகள்,வடிவங்கள் ஏற்படுத்துதல் முற்றாக தடை செய்யப்படு கின்றது.
• பூசகர்கள் மற்றும் மத அனுஸ்டானங்களை நடத்துபவர்கள், அவர்களுக்குரிய சம்பிரதாய சிகை அலங்காரம் மேற்கொள்ளமுடியும்.
அதேவேளை பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் தலைமுடியை இடதுபக்கம் உச்சிபிரித்து ஒழுங்காக அழகாக சீவப்பட்டிருப்பதுடன், எண்ணெய் தவிர்ந்த ஏனைய திரவங்கள் (ஜெல்இசாயம்) பூசுவதும்,சென்ற் போன்ற செயற்கை வாசனைத் திரவியங்கள் பூசுவதை யும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும் என்பதையும் கவனத்தில் எடுத்து தமது பிள்ளை களைக் கட்டுப் பாடான முறையில் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறப்படதுடன் பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்கள் ஆகியோரும், இவற்றைத் தவிர்த்து,முன்மாதிரியாக இருந்து, மாணவர்களின் தலை முடி வெட்டு மற்றும் சீருடைகளில் கூட்டுப் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

எப்படி இருக்கின்றது இந்தத் தலைமுடி வெட்டு…… முன்பள்ளிப் பிள்ளை ஒன்றுக்கு, தாய் தந்தை யரினால் வெடடுவிக்க்பட்ட தலை முடி வெட்டு……. பெற்றோர்களும்,பாடசாலையின் அதிபர்களும் அல்லது முன்பள்ளியின் ஆசிரியை களும் இதற்குத் துணைபோனால் எப்படி நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக் கலாம்?








