யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகணத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற வனமுறை சம்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போது குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.சுன்னாகம், மானிப்பாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், வன்முறை சம்பங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், தொடர்ந்தும் விசேட சுற்றிவலளப்புகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளின் ஊடாக யாழில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் வாள்வெட்டு குழுவின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








