மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெருவிளையாட்டு நிகழ்வுகளின் மென்பந்தாட்ட தொடரின் இறுதிஆட்டம் நேற்று நடைபெற்றது.

இன்றைய இறுதியாட்டத்தில் சைனிங்ஸ்,எதிர் றெயின்போ அணிகள் மோதின
முதலில் துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் அணி 10வது பந்துப்பரிமாற்றத்தில் சகல இலக்குகளையும் இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றது…..
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணி 4.3 பந்துப்பரிமாற்றத்தில் 4 இலக்குகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து
றெயின்போ வி.க வெற்றி பெற்று சம்பியனாகியது








