யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சிங்கள இளைஞர் சாரதியாக நியமனம்

0
624 views

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு நேற்றைய தினம் தென்பகுதி சகோதர மொழி இளைஞர் சாரதியாக நியமிக்கப்பட்டு தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கில் வேலையற்ற ஆயிரக் கணக்கானோர் வேலையற்றோர் காத்திருக்கும் நிலையில் சாரதி நியமனம் தெற்கு இளைஞர்களிற்கு வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 8 சாரதிகள் இவ்வாறு நியமிக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது குறித்த 8 சாரதிகளையும்  தென்பகுதிக்கு மீள அழைத்த நிலையில் இனிவரும் காலங்களில் சாரதி மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிநிலை தெற்கைச் சேர்ந்தவர்களிற்கு வழங்கப்பட மாட்டாது  என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே அனைத்து உத்தரவாதங்களும் மீறப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மீண்டும் தென்பகுதி இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here