வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் 7 ஆவது போட்டி

0
648 views

வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் 7 ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் ரிங்கோ டைட்டடன்ஸ் மற்றும் முல்லை ஃபீனிக்ஸ் எப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 8 தமிழ் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகள் இந்த போட்டித்தொடரில் பங்கேற்றிருக்கின்றன.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் கிளிநொச்சி கிளியூர் கிங்ஸ் அணி மற்றும் ரிங்கோ டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்த போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணி 9: 4 என்ற கோல் கணக்கில் ரிங்கொ டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் தனது வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தின் கீழ் இன்று ரிங்கோ டைட்டன்ஸ் அணி களமிறங்குககின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here