யாழ் மாவட்டப்பாடசாலைகளுக்கு இடையிலான டி எஸ் ஐ வெற்றிக்கிண்ணத்துக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 15வயது ஆண்களுக்கான போட்டியில் மாவட்டச் சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் .

குறித்த போட்டியின் இறுதியாட்டம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ் இறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீ.மகா வித்தியாலயமும் சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின..
மூன்று செற்றுக்கள் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் 25:17 25:12 என்றபுள்ளிகளைப்பெற்று 2:0 நேர் செற்றில் சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்.








