யாழ் மாவட்டப்பாடசாலைகளுக்கு இடையிலான டி எஸ் ஐ வெற்றிக்கிண்ணத்துக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 19 வயது பெண்களுக்கான போட்டியில் மாவட்ட சம்பியனாகியது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை.

குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் பலப்பரீட்சை நடத்தின..
மூன்று செற்றுக்கள் கொண்ட இச் சுற்றுப்போட்டியில் 25:18 25:17 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 நேர் செற்றில்ச ம்பியனாகியது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை. இதில் மூன்றாமிடத்தை நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பெற்றது.








