யாழில் நேற்றைய தினம் 6 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

0
619 views

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் யாழ். சிறைச்சாலைக் கைதி, மல்லாவியில் நடைபெற்ற மரணச் சடங்குக்கு சென்று திரும்பியர், கொழும்பிலிருந்து திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஆகிய மூவரும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் வசிக்கும் ஆசிரியை ஒருவர்

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட தாதியர்களுடன் தொடர்பிலிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

இன்னொருவர் 79 வயதுடைய மூதாட்டி, அவர் சிகிச்சைக்காக வந்த நிலையில் நோய் அறிகுறி காணப்பட்டமையால் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here