நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள மலையாள படம் ‘உரு அடார் லவ்’. இப்படத்தின் டீஸர் காதலர் தினத்தன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. புருவத்தை உயர்த்தி கண்ணடித்து, விரல்களில் துப்பாக்கி பாவனை செய்து முத்தத்தை காதலன் மீது சுடும் ஸ்டைலும் செய்திருந்தது ஒரே நாளில் இணைய தளத்தில் வைரலானது. பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் முதல் கோலிவுட் ஹீரோக்கள் வரை அவரது ஸ்டைலுக்கு மயங்கி வாழ்த்து பதிவு செய்திருந்தனர். 1 கோடியே 60 லட்சம்பேர் இதுவரை யு டியூபில் அக்காட்சியை பார்த்திருக்கின்றனர்.
எவ்வளவு பாராட்டு குவிந்ததோ அதற்கு எதிர்வினையாக வம்பும் வந்து சேர்ந்திருக்கிறது. பிரியா நடித்திருக்கும் குறிப்பிட்ட பாடலின் வரிகள் இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் மீதும், பாடலாசிரியர் மீதும் ஐதராபாத் போலீசில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் புகார் அளித்திருக்கின் றனர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் பிரியா, புகார் தொடர்பாக கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
உரு அடார் லவ் படம்தான் பிரியா நடிக்கும் முதல்படம். இதில் சில லட்சங்களே அவருக்கு சம்பளம் பேசப்பட்டது. ஒரேநாளில் ஓஹோவென புகழ் பெற்ற பிரியாவுக்கு கைநிறைய படங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நிகில் சித்தார்த் தமிழ், தெலுங்கில் நடிக்கும் படமொன்றில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய அணுகினர். அவரோ ரூ. 2 கோடி சம்பளம் கேட்டு ஹீரோவையும், பட குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.