புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இரட்டைக்குடியுரிமை பெற்றுக்கொய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2015 மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 31000 இலங்கையர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுபாட்டு ஜெனரல் கூறியுள்ளார்.
இலங்கையில் இரட்டைக்குடியுரிமை பெறுவதாயின் ஒருவர் 5இலட்சம் ரூபாவும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தலா 50000 ரூபாவும் செலுத்த வேண்டும்.