31 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பும்
நன்றி நவிலலும்
அமரர் கயிலாயபிள்ளை புவனேஸ்வரன் (கண்ணாளன்)
திருகோணமலையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை மதவடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு கயிலாயபிள்ளை புவனேஸ்வரன் (கண்ணாளன்) அவர்கள் கடந்த 15.11.2017 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டறிந்தும் , இணையத்தளத்தில் பார்த்தறிந்தும் ஆறாத்துயரில் இருந்த எமக்கு நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மற்றும் 15.12.2017 நாளை காலை கீரிமலையில் அஸ்தி கரைக்கப்பட்டு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகவும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்









