மேற்படி அம்மன் ஆலய திருமண மண்டபக் கடன் ஆனது பல வருடங்களாக (பழைய இரு நிர்வாக சபையினரால்) கொடுக்கப்படாமல் இருந்தது. இது சம்பந்தமாக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கும் நடைபெற்று வந்தது. தற்போது பா.உதயகுமார் தலைமையிலான புதிய நிர்வாகசபை ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாவுக்கு மேல் இருந்த கடன் தொகையை நீதிமன்றம் சென்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியது அதனை நீதிமன்றுக்கும் வழங்கியது. விசாரணைகள் முடிவில் ஒரு கோடி ரூபா வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் அரைப்பங்கு கடன் ஐம்பது இலட்சம் ரூபா இன்று வழங்கப்பட்டது. மீதி ஐம்பது இலட்சம் ரூபாவானது மேலும் இரு தவணைகளில் கட்டுவதற்கும் உடன்பட்டுள்ளனர்.
இப் புதிய நிர்வாக சபையானது பொறுப்பேற்று ஐந்து மாதங்களில் ஐம்பது இலட்சம் ரூபா கடன் கொடுத்தமை முக்கிய விடயமாகும்.