வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிறிக்கற்ச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் கடந்த திங்கட் கிழமை நெற்கொழு கழுகுகள் மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்விறுயியாட்டத்தில் தீருவில் விளையாட்டுக் கழகமும் நேதாஜி விளையாட்டுக்கழகமும் மோதின. 10 பந்துப்பனிமாற்றங்கள் கொண்ட இவ்விறுதியாட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வல்வை தீருவில் விளையாட்டுக்கழகமும் நேதாஜி விளையாட்டுக் கழகமும் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி நின்ணயிக்கப்பட்ட பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளைப் இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றது.அவ்வணி சார்பாக குமரன் அதிக பட்சமாக 13 ஓட்டங்களைப்பெற்றுக் கொடுக்க பந்து வீச்சில் ஜிவிந்தன் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.
அடுத்து 66 ஓட்டங்களை வெற்றி இலக்காக்கொண்டு களமிறங்கிய நேதாஜி அணி 8.5 பந்துப்பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைத்தது.
அவ்வணி சார்பாக லக்ஸ்மன் 19ஓட்டங்களையும் முகுந்தன் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் மயூரன் 3 இலக்கினையும் காசன் 2 இலக்குகளையும கைப்பற்றினர்.









