யாழ்.உடுப்பிட்டி பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி.சேதுராஜா அவர்கள் தமது பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பிள்ளைகள் மாலை நேர வகுப்புக்களிற்கு செல்வதற்குரிய பணவசதி அற்ற நிலையில் அவர்கள் வகுப்புகளிற்கு சென்று கல்வியை தொடரமுடியாத நிலை காணப்படுவதாக சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களிடம் தெரிவித்திருந்தார்.
அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் சிவன் அறக்கட்டளை இணைப்பாளர் க.சதீஸ் அவர்களும் இன்றைய தினம் பாடசாலையில் குறிப்பிட்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார்.