யாழில் தமிழர் கலாசார உடையில் வெளிநாட்டவர்கள்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன்இ ஆரம்பமானது.
ஏ விளம்பி வருட மஹோற்சவப் திருவிழாவிற்கு சென்ற ஆண்டினை விட இந்தாண்டு அதிகமாக பக்தர்கள் வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டிலில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளைஇ சுகாதார தேவைகள்இ குடிநீர்இ நடமாடும் பொலிஸ் சேவைகள்இ மற்றும் ஏனைய இதர தேவைகள் என்பன ஆலய சுற்றாடலில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
திருவிழாவின் போது பாதுகாப்பிற்காகவும்இ அசம்பாவிதங்களை கண்காணிப்பதற்காகவும் 34 சி.சி.டி கமெரா கோயில் உள்ள அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வாகன பாதுகாப்புக்காக சைக்கிள் ஒன்றுக்கு 05 ரூபாவும்இ மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு 10 ரூபாவும்இ மற்றும் எனைய பெரிய வாகனங்களுக்கு 20 ரூபாவும் அறவிடப்படும் என்ற தரவுகளும் வாகன பாதுகாப்பு நிலையத்தினர் தெரிவிக்கின்றனர்.
நல்லூர் கந்தனின் திருவிழா காண உலகத் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவது வழமை. இந்தாண்டும் அதிகளவானவர்கள் வருகை தருவார்கள் என்னும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிகளவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.