நள்ளிரவு வேளை வீடு புகுந்து மாணவியைக் கடந்த முயற்சித்த கும்பலை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் நன்றாக கவனித்த பின் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது…
இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பதின்ம வயதடையாத மாணவி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார் .இதனையடுத்து இதுதொடர்பாக பெற்றோரால் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.இதனையடுத்து இருவரும் பொலிஸில் சரணடைந்தனர்.இந்நிலையில் மாணவியின் வயதினை அடிப்படையாகக் கொண்டு இருவரின் சம்மதத்துடன் பிரிந்து செல்ல அனுமதித்தனர். இந்நிலை நேற்று முன்தினம் குறித்த வீட்டிற்கு வாள்களுடன் சென்ற இளைஞர் குழு அச்சமூட்டும் வகையில் நடமாடினர்.
இந்நிலையில்
நேற்று அதிகாலை 12 மணியளவில் ஹயாஸ் வாகனத்தில் வருகை தந்த பெண்கள் இருவர் உட்பட 7 பேர் கொண்ட குழு வீட்டின் சுற்றாடலில் உள்ள மின் விளக்குகளை அணைத்தபின் வீட்டினுள் அத்து மீறி நுழைந்த குழு வீட்டிலிருந்த வயோதிப மாது மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு மாணவியைக் கடத்த முயற்சி செய்தனர் இதனை அடுத்து வீட்டிலுளோர் அபயக் குரல் எழுப்பியதை அடுத்து இளைஞர்கள் ஒன்று கூடவே தாக்குதல் மேற்கொண்டவர் தப்பியோட முயற்சித்தனர். இவர்களைச் சுற்றி வளைந்த இளைஞர்கள் அவர்களில் இருவரை மடக்கிப் பிடித்தனர்.அடுத்து ஏனையவர்கள் ஹயஸ் வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்தபோது அதனையும் மடக்கிப் பிடித்தனர். வானுக்குள் தாயாரும் மகளும் இருந்ததுடன் மேலும் இரு இளைஞர்கள் இருந்துள்ளனர்.
இவர்களையும் மடக்கிப்பிடித்த இளைஞர்கள் முறையாகக் கவனித்தபின் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்ப படைத்தனர். இதேவேளை இக் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பியோடித் தலை மறைவாகிவிட்டார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மடக்கிப் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.







