வல்வை சிதம்பரக் கல்லூரியின் இரண்டு உதைபந்தாட்ட அணிகளுக்கு உரிய சீருடைகள் கல்லூரியின் பழையமாணவரும் வல்வையின் மூத்த விளையாட்டு வீரருமான திரு க. தேவசிகாமணி (பொட்டுக்கட்டி அண்ணா) மற்றும் பிள்ளைகளால் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
கடந்த மாதம் விளையாட்டுப் போட்டிக்குரிய தெரிவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது , மார்ச் மாதம் உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகும் போது அணிகளுக்குத் தேவையான சீருடைகள் இல்லை என்ற விபரம் பழைய மாணவர்கள் திரு க. தேவசிகாமணி , திரு மு.தங்கவேல் ஆகியோருக்கு பாடசாலை உடற்கல்வி ஆசிரியரால் தெரிவிக்கப்பட்டது. உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று சீருடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
Home சிதம்பரா கல்லூரி வல்வை சிதம்பரக் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்கு சீருடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன.