தங்கவடிவேல் அண்ணாவும் வல்வை புளுசும்

0
2,254 views

புலம்பெயர்ந்த வல்வையர்களின் கண்ணீர் அஞ்சலி
சின்னத்துரை தங்கவடிவேல்
வல்வையர் வரலாற்றில் வாசமலரும் வாடாமலருமிவன்
குச்சம் வாழ்வியலில் குச்சத்தார் கலங்கரை விளக்கு போல்
கும்பகோணமம் விளக்குப்போல எண்ணற்ற தீபம் சுமந்தவன்
சிதம்பராவின் அழிய அஜந்தா சித்தரமிவன்
இயற்கையின் நியதியை உறுதியுடன் ஏற்பவர்கள் வல்வையர்கள்
இழப்புக்களால் தாய்ஊரை உரமிட்டவர்கள் வல்வையர்;கள்
உன்னைப் போல் வாழ்ந்தவர்களை வல்வையர் நீலங்கள்
தமிழிலும் பொதுப் பாசையிலும் பதிந்து விட்டார்கள்
காமாளையில் கதிரவன் கடலுக்கு வரும் முன்னரே
காலைக்கடனுக்காக வட்டிபாறை மறைவுக்கு செல்பவன்
குடும்பத்தரின் குடிநீருக்காக வரைஞ்சன் பட்டயம் பெற்றும் –
அரியோட்டி வீதிவரைவந்து காலை மாலை நீர் சுமந்தவன்
வல்வையரின் சிதம்பராவும் வல்வையர் நீலமும் குச்சம் சைனீங்ஸ்சும்
வல்வையர் வரலாற்று ஆவணமும் உனக்கென்று ஒரு பக்கமில்லமல்
தன்னை முழுமை படுத்திக் கொள்ள முடியாது நாளையவர்களின் முன்னுரை
உன் பொற்பாதம் பட்ட  குச்சம் குப்பை மேட்டில்தான் சரஸ்வதியும்
பழைய விளையாட்டுத்துறை ஏழ்மையில் இருந்தது
ஊன்றி பாயவும் உயரபாய்து விழுந்ததும் வெறும் நிலம்தான்
நீ உயர பாயந்து விழுந்து பறந்து பாய்ந்து பந்தடித்த வீரவிழுதுகள்
பிற்கால வாழ்வியலின் நோய்கள் வேதனைகள் மரணங்கள் வரையோ
தங்கவடி அண்ணாவின் வீரனின் மரணத்தை நேசிப்பவர்கள் நண்பாகள் உறவினர்கள் சைனீங்ஸ் வையிரவிழாவில் ஆயிரம் நல்ல புத்தகங்கள்
குச்சம் சுழலில் நூறு மரக்கள்றுகளாவது ஞாபகப்படுத்தப்பட வேண்டும்
ஆஸ்தியின் சிறு துளியாவது வல்வைக்கடலில் சங்கமிக்கட்டும்.
உன் ஆத்மா மீண்டும் சிறு விணாடித் துளி வல்வை மண்ணில் வாழ்ந்து சாந்தியடையட்டும்.
ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம் சாந்தி
புலம்பெயர்ந்த வாள் வெட்டித்துறை மக்கள் சார்பில்
சோ.செ.தெய்வச்சந்திரன் (குச்சம் குட்டித்துரை)
23.05.2017.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here