வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப்பகுதியில் அமைக்கப்படவுள்ள குமார் ஆனந்தனின் நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர பிரதி அமைச்சர் எச்.எம எம்.ஹரீஸ் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா உட்படப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.