ஓட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்தது ;சாரதி உட்பட ஐவர் படுகாயம்

0
740 views

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற ஓட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டோ சாரதி உட்பட 5 பேர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை மந்திகைச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் புலோலியைச் சேர்ந்த த.சிவனேஸ்வரன் ( (வயது52) புலோலி தெற்கைச்சேர்ந்த தம்பு .உருத்திரமூர்த்தி(வயது57)அதே இடத்தைச்சேர்ந்த கா.யோகராசா(வயது55)மற்றும் கரணவாய் தெற்கைச் சேர்ந்த செ.தங்கராசா(வயது68)ஆகியோரே படுகாயமடைந்தவராவார்.
நேற்றுக்காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் பஸ் நிலையத்தில் பஸிற்கு காத்து நின்ற போது வேகமாக வந்த ஓட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றவர்களை மோதித்தள்ளியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here