வல்வை விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட வீரர்களுக்கு ஒழுங்கு முறையாக பயிற்சி கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தவதற்காக 13.10.2016 வியாழக்கிழமை வல்வை விளையாட்டு அரங்கத்திலுள்ள கரப்பந்தாட்ட மைதானத்தில் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரு.மு.தங்கவேல், திரு.க.தேவசிகாமணி ஆகியோருடைய அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக்கழக தலைவர் திரு.மு.பிறேம்குமாரின் ஆதரவுடனும் கலாநிதி சபா இராஜேந்திரன், கப்டன் சிவநேசன், ஆகியோரின் முன்னிலையில்; சம்பிரதாயமாக பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆவரங்கால் மத்தியைச் சேர்ந்த திரு கந்தசாமி ஒவ்வொரு கிழமையும் மாலை 7.00மணியிலிருந்து 9.00மணி வரை 5நாட்களுக்கு பயிற்சி கொடுப்பார். 15வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு சமூகமளித்திருந்தனர்.





































