அருணோதயக்கல்லூரியின் முன்னைய சாதனையை முறியடித்த புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் மாகாஜனாவின் மங்கை ஜெ..அனித்தா.கண்டி போகம்பரை மைதானத்தில் இடம்பெற்று வரும் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்பொட்டியில் நேற்று நடைபெற்ற 121 வயதுப்பெண்களுக்கான கோலூன்றிப்பாயட்தல் நிகழ்வில் 3மீற்றர் 30 சென்ரி மீற்றர் உயரம்பாய்ந்தே அனித்தா இப்புதிய சாதனையைப்படைத்த தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு 21 வயதப் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் அருணோதயக்கல்லூரி மாணவி பவித்திரா 3 மீற்றர் 17 சென்ரிமீற்றர் உயரம் பாங்ந்த சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
இச;சாதனையை நேற் றுமுறியடித்து மகாஜானாவின் மங்கை அனித்தா 3 மீற்றிர் 30 சென்ரி மீற்றர் உயர்பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டி வடமாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.இதேநேரம் பெண்களுக்கான சட்டவேலி ஓட்டத்தில் பங்குபற்றி அனித்தா மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக’கத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈதே வேளை அணமையில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் 3மீற்றர் 41 சென்ரி மீற்றர் பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டி தங்கம் வென்றிரந்தமையும் குறிப்பிடத்தக்கது. .