அமரர் தனலட்சுமி இராமச்சந்திரன் (தனம்)
மண்ணில் : 22 மார்ச் 1946 — விண்ணில் : 14 செப்ரெம்பர் 2016
யாழ். வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும்இ லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலட்சுமி இராமச்சந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா சிவகாமசுந்தரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை உத்தரேஸ்வரி அம்மாள் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
வளர்மதி சிறிதரன், காலஞ்சென்ற அன்புசிவம், இந்துமதி நந்தகுமார், ரஜனி சிவகுமாரன், இராமச்சந்திரன் அன்பழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதனசுந்தரம் சிறிதரன், வேலுப்பிள்ளை நந்தகுமார், மகேசதாசன் சிவகுமாரன், மதுமதி அன்பழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தோஸ், சாருகாஸ், அபிராமி தர்மேந்திரன், நிவேதா, துவாரகா, கிஷோர், யாதவன், சனோஐன், சஞ்சீவன்ரி, த்திகா, ஆகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் பாசத்தின் பிறப்பிடமே
அன்பையும் அரவணைப்பையும் தந்தவரே!
எங்களைத் தவிக்க விட்டு
அமைதியாய் சென்றீர்களே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்தும்இ தொலைபேசிஇ மின்னஞ்சல்இ குறுஞ்செய்திஇ முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும்இ அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டோர்க்கும் மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நாம் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது அந்தியேட்டிக்கிரியை 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்று பின்னர் Saint Michael’s Roman Catholic Church – Pollard’s Hill, 9 Fern Ave, Pollards Hill, Mitcham CR4 1LS, United Kingdom எனும் முகவரியில் மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 29 Lancing Road,
Croydon,
Surrey CR0 3EN,
London.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442086891727
செல்லிடப்பேசி: +447827331505