மனோகராவின் கால்ப்பந்தாட்டத் தொடரில் அண்ணாசிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகம் மற்றும் வல்வை ஆதிசக;தி விளையாட்டுக்கழகம் என்பன வெற்றி பெற்றுஅடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரிதியாக நடத்தும் கால்ப்பந்தாட்டத் தொடர்டகுறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது
இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் அண்ணசிலையடி இளைஞர் விளையாட்டு;கழகமும் நெற்கொழு கழுகுகள் வினளயாட்டு;க்கழகம் பலப்பரீட்சை நடத்தின.ஆரம்பம்முதல் இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில முதல் பாதியில் பந்து அங்குமிங்கும் உருண்டோட நேரமும் உருள முதல்பாதி கோல்கள் பதிவு செய்யப்படாது நிறைவுக்கு வந்த்து.தொடர்ந்து இரண்டாம்பாதியிலும் அதே நிலைகாணப்பட்டபோதும் 32 ஆவது மற்றும் 37 ஆவது நிமிடங்களில் அண்ணாசிலையடி அணியின் இளம் வீரர் சிந்துஜன் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப்பொட 2:0 என்று வெற்றி பெற்றது அண்ணாசிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகம்.
தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழமும் நுன்னாகம் நியுவாரிஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.இதில் கௌரிதாசனின் கற்றிக் கோலுடன் 4:1 என்ற நிலையில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்று முன்னேறியது.இதில் ஆதிசக்தி அணி சார்பாக கௌரிதாஸன் 4 கோல்களையுமு நியு வாரியஸ் சார்பாக வர்ணன் கோல்போட்டார்.