ஞானரூபனின் அட்டகாசமான கோல் மூலம் வெளிநாட்டு வீரர்கள் கொண்ட அணியை வெற்றி கொண்டது இலங்கை தேசிய கால்ப்பந்தாட்ட அணி.
இலங்கை தேசிய கால்ப்பந்தாட்ட அணி கம்பொடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.
ஆதற்கான பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.அதில் இலங்கைத்தேசிய கால்ப்ந்தாட்ட அணியும் இலங்கையின் முன்னணி கழகங்களில் விளையாடடும் வெளிநாட்டு வீரர்கள் கொண்ட அணியுமு; மோதிய போட்டி கடந்த புதன்கிழமை கொழும்பு பொலிஸ்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தின் முதல்பாதியும் இரு அணிக்கும் கோல் போடுவதற்க்கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட கோல்க்கணக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறைவுக்கு வந்தது முதல் பாதியாட்டம்.
தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாம்பாதியாட்டதின் 4 ஆவது நிமிடத்தில் சுயாதீன உதையினை இலங்கை அணி விரர் சர்வான் ஜாகார் கோலாக மாற்றினார்.அடுத்த சில நிமிடங்களில் வெளிநாட்டு வீரர்களின் அணிசார்பாக ஜிபேலா தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கோல்போட ஆட்டம்1:1 என்று சமனிலை கண்டது. அடுத்த நிமிடங்களில் யாழ் மண்ணின் மைந்தனும் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளவருமான ஞானரூபன் கோல்பொட 2:1 என்று முன்னிலை பெற்றது இலங்கை அணி.கடைசிநேரத்தில் வெளிநாட்டவர் அணிக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஜஸாக் அபா கோலாக மாற்ற ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.சிறந்த ஆட்டநாயகனாக ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டார்