கனடாவில் ரொறொன்ரோ புளுஸ் கடந்த 30 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் மிகச் சிறந்த முறையில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த வருடம் 27.8. 2016 திகதி 30 ஆவது வருடாந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ரொறொன்டோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. இச் சுற்றுப்போட்டிளில் ரொறொன்ரோ புளுஸ் அணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. முதல் முறையாக 1995 ஆம் ஆண்டும் இரண்டாம் முறையாக 2015 ஆம் ஆண்டும் வெற்றி பெற்ற ரொறொன்ரோ புளுஸ் அணி இந்த வருடமும் வெற்றி பெற்றுள்ளது.