2000 பவுண்ட வெல்லப்போவது யார்?

0
959 views

2000 பவுண்ட வெல்லப்போவது யார்?
2010 Valvai Blues UK
2011 Denmark Stars
2012 Myl.Kannakey UK
2013 Stovner Norway
2014 Eelaver France
2015 Young Stars Norway
ஆகிய கழகங்கள் கடந்த வருடங்ளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த வருட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பற்றி வல்வை கோடை விழா உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பொறுப்பாளர் ஜீவன் அவர்கள் கூறிய விபரங்கள்
9,11,13,15,17,19, வயதிற்கு உட்பட்டோர் மற்றும் அனைவருக்குமான பிரிவு, 40 வயது பிரிவு என்று 8 பிரிவுகளில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறுகின்றது.

8 பிரிவுகளிலும் இருந்து 125 உதைபந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன.

காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் போடடி;கள் அணைத்தும் 7 மணிக்குள் முடிவடையக் கூடிய வகையில் 14 உதைபந்தாட்ட மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

3.7.2016 ஞாயிற்றுக்கிழமை வல்வை கோடைவிழாவில் காலை 10 அணியில் இருந்து மாலை 7 மணிக்குள் சுமார் 9 மணித்தியாளங்களில் 239 உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.

239 போட்டிகளுக்கும் நடுவர்களாக கடமையாற்ற இங்கிலாந்து நடுவர் சங்கத்தில் இருந்து தகுதி வாய்ந்த 21 நடுவர்கள் வரவுள்ளனர்.

இந்த வருடம் முதல் முறையாக 9 வயது பிரிவுக்கான சுற்றுப்போட்டி நடைபெறுகின்றது

அனைவருக்குமான (Open) பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் உள்ள பலமான அணிகளுடன் பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், கொலண்ட், நோர்வே ஆகிய நாடுகளில் இருந்தும் பலம் வாய்ந்த அணிகள் களத்தில் நிற்கின்றக.
விறு விறுப்பான போட்டிகளையும் 2000 பவுண்ட் யார் வெல்லப் போகின்றார்கள் என்பதையும் 3.7.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை வல்வை கோடைவிழாவில் நேரடியாக வந்து பார்த்து மகிழுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here