கதிரேவற்பிள்ளை தங்கரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை உதயசூரியன் கழகத்தைச் சேர்ந்த திரு.திருமதி.ஆனந்தசிகாமணி சிவகுமாரி அவர்களின் நிதிப்பங்களிப்பில் மு/ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றமானது மீளவும் இரண்டு இலட்சம் ரூபாய் (200,000.00) செலவில் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டு 14.08.2024 அன்று மீண்டும் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு உதயசூரியன் கழகத்தின் தலைவர் திரு.சி.தவராசா(மனோ) அவர்களும், உறுப்பினர்களான திரு.மு.ஜெயதரன் மற்றும் திரு.பா.சிவஅன்பு அவர்களும் வருகை தந்திருந்தனர்.
அத்துடன், துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.தேவகுமாரன் அவர்களும், உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) திரு.து.ஜெயதேவன் அவர்களும் வருகை தந்திருந்தனர்.