Macau நாட்டினை வீழ்த்தி தமது முதல் போட்டியில் வெற்றி பெற்றது இலங்கை U-19…

0
458 views

கொரியா நாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுகுற்பட்டவர்களுக்கான “44th Asian School Championship-2016” சுற்றத்தொடரில் பங்குபற்றி வரும் எம் வட மாகாண வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி, நேற்று முன் தினம் இடம் பெற்ற Macau நாட்டிற்கு எதிரான தமது முதல் போட்டியில் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பல்வேறு சுற்றுத்தொடர்களில் தொடர்ந்தும் தமது திறமையை நிருபித்த வீரர்களை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழு கடந்த வாரம் கொரியா நாட்டிற்கு பயணமாகியது.

இந்த குழுவில் எம் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். உதைபந்தாட்டத்தில் வடக்கின் முடிசூட மன்னர்களாக திகழும் யாழ். ஹென்றியரசர் கல்லூரி வீரர்களான அ.மதுசன், செ. யூட் சுமன் மற்றும் நே. அன்ரனி ரமேஷ், மற்றும் யாழ் மத்திய கல்லூரியின் வீரர்களான விதுசன் மற்றும் சயந்தன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

மேலும்இன்று தமது இரண்டாவது போட்டியில் சீனா நாட்டினை எதிர் கொள்ளவுள்ள இவ் அணியினரை நாமும் வாழ்த்துவோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here